ஸ்ரீரங்கத்தில் ஈ.வே.ரா வுக்கு சிலை !
பெரியாரின் முழு உருவச்சிலை ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே, பல இந்து இயக்கங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், அமைக்கப்படவுள்ளது. இச்சிலை அமைப்பதற்கான தீர்மானம், 1973-இல் ஸ்ரீரங்கம் முனிசிபல் கவுன்சில் தலைவரான வெங்கடேஸ்வர தீக்ஷிதர் தலைமையில் நிறைவேற்றப்பட்டு, ஓர் அரசு ஆணை வாயிலாக 144 சதுர அடி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டது. பல வருடங்கள் விஷயம் கிடப்பில் இருந்தது. இதைத் தொடர்ந்து, தி.க தலைவர் வீரமணி, டிசம்பர் 1996-இல், சிலைப் பணிக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், இந்து இயக்கங்களின் தொடர் எதிர்ப்பால், நிலத்தைத் தோண்டி சிலைக்கு அடித்தளம் அமைக்கும் பணி மே-2006இல் தடைப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, ஸ்ரீரங்கம் ஊராட்சி தி.கவினர், வீரமணியுடன் ஆலோசனை செய்து சிலையை நிறுவும் பணியைத் தொடங்கினர். ஒரு தற்காலிக மேடையமைத்து ஈ.வெ.ரா சிலையை அதன் மேல் வைத்துள்ளனர். சிலைக்கான நிரந்தர அடித்தளமும், மேடையும் இன்னும் அமைக்கப்படவில்லை ! திராவிட கழகத்தினர், சிலை அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் ஈ.வெ.ரா வின் நினைவு தினமான டிசம்பர் 24க்குள் முடிக்கப்பட்டு, வீரமணி சிலையை திறந்து வைப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பி.ஜே.பி-யின் மாநில பணிக்குழு உறுப்பினரான ராமகிருஷ்ணன், தீவிர நாத்திகரான ஈ.வெ.ராவின் சிலையை, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்து ராஜகோபுரம் முன்பு நிறுவதின் மூலம், ஆத்திக இந்துக்களின் நம்பிக்கையை திகவினர் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், " 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுதும் பல உத்சவங்கள் நடைபெறுகின்றன. இறை நம்பிக்கையாளர்களை மூடர்கள் என்று பேசிய ஈ.வே.ராவின் சிலையை இங்கு நிறுவதின் மூலம், திகவினர் ஆத்திகர்களின் உள்ளத்தை புண்படுத்தி விட்டனர்" என்று கூறியுள்ளார். சிலையை வேறு இடத்தில் அமைப்பதை இந்துக்கள் எதிர்க்கவில்லை (!) என்றும் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
டெயில் பீஸ்: அரசு அனுமதி தந்து, ஒருவரின் சிலையை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரிடத்தில் அமைப்பது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஈ.வெ.ரா சிலையை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதால், ஸ்ரீரங்கநாதருக்கு எந்த களங்கமும் ஏற்படவும் போவதில்லை ! ஆத்திக அன்பர்கள் நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட இரு பாசுரங்களை நினைவில் கொண்டால், இவ்விஷயத்தை ஒரு பிரச்சினையாகவே எண்ண வாய்ப்பில்லை !
******************************
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே
****************************
சில வாரங்களுக்கு முன் ஈ.வெ.ரா சிலைக்கு சந்தனம் பூசி, மாலையிட்டு, பூஜை போட்டு அவருக்கு களங்கம் உண்டு பண்ணி விட்டார்கள் என்று ஒரு பிரச்சினை கிளம்பியது போல, மறுபடியும் இன்னொரு பிரச்சினை எழாமல் இருக்க வேண்டும். என்ன, அடுத்த தடவை, சிலை வைணவக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், விஷமிகள் சந்தனத்திற்கு பதிலாக நாமத்தை குழைத்துப் போட்டு, கலாட்டா செய்யாத வகையில், நிரந்தரமாக ஒரு காவலரை, சிலையின் பாதுகாப்புக்கு நியமித்தால் நல்லது ! அதனால், ஒரு சாரார் மீது குற்றம் சாட்டி சண்டை போடும் அவசியமும் ஏற்படாது !!!
எ.அ.பாலா
*** 260 ***
34 மறுமொழிகள்:
As usual, my comment will be the first comment :)))
//ஈ.வெ.ரா சிலைக்கு சந்தனம் பூசி, மாலையிட்டு, பூஜை போட்டு அவருக்கு களங்கம் உண்டு பண்ணி விட்டார்கள்//
அவர்களேன்ன செருப்பு மாலையா போட்டார்கள்...பெரியாருக்கு சந்தனம் பூசுவது அவமரியாதை என்றால், இந்து கோவில் முன்பு அவர் சிலை (கடவுளை நம்புபவன் காட்டுமிறாண்டி என்பவன் சிலை) வைப்பதும் கடவுள் நம்மிக்கை உள்ளவர்களூக்கு அவமரியாதைதான்.....பார்பனியத்தை எதிர்த்து பார்பனர்களை ஆதரித்துவரும் அரசிற்கு இது தெரியாதா?...தடுக்க இயலாதா?....
எ.அ.பாலா,
நம்மாழ்வாரின் வரிகள் எல்லாம் சரி.
முதலில் ஈவெரா சிலை வரும் பின்னர் வைகுண்ட ஏகாதசி அன்று இவர்களது பொன்மொழி-செம்மொழி கேட்டவாறே வைகுந்தவாசலுக்குச் செல்லவேண்டும்!
கோவிலுக்குப் போவதே மன அமைதிக்காக. பொதுமக்கள் எல்லோருமே தத்துவ ஞானிகளாக இருக்கவேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியுமா?
சரி, தினசரி ஈவெராவுக்கு சந்தனம் பூசி, தீபாராதனை காட்டவேண்டும்.
அரங்கன் VS வெங்காயம் ராமசாமி
கருணாநிதிக்குத் தான் கொண்ட கொள்கை தேய்மானத்தினை இம்மாதிரி அரசியல் திரா'விட' பெத்தடின் ஊசி போட்டு விரைவாக பலன் அடையப் பார்க்கிறார்.
பெஸ்ட் இஸ் டு இக்னோர் தெம். முக்கியத்துவம் இம்மாதிரி நிகழ்வுகளுக்குத் தரவேண்டியதில்லை.
கோவில் முன் நிறுவப் படும் ஈவெரா சிலையால் பக்தர்களுக்கு நன்மை இல்லை என்ற போதும் கோவில் மாடப் புறாக்களுக்கு கருணாநிதி அனுமதித்து கி.வீரமணி கட்டிய கழிவறையாக இருந்துவிட்டுப்போவதில் ஆட்சேபமில்லை எனக் கொள்ளவேண்டியதே!
அனானி, நெருப்பு சிவா, ஹரிஹரன்,
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
//கோவில் முன் நிறுவப் படும் ஈவெரா சிலையால் பக்தர்களுக்கு நன்மை இல்லை என்ற போதும் கோவில் மாடப் புறாக்களுக்கு கருணாநிதி அனுமதித்து கி.வீரமணி கட்டிய கழிவறையாக இருந்துவிட்டுப்போவதில் ஆட்சேபமில்லை எனக் கொள்ளவேண்டியதே!//
இது, இது கருத்து....கலக்கல் ஹரி....
//ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே, பல இந்து இயக்கங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், அமைக்கப்படவுள்ளது. இச்சிலை அமைப்பதற்கான தீர்மானம், 1973-இல் ஸ்ரீரங்கம் முனிசிபல் கவுன்சில் தலைவரான வெங்கடேஸ்வர தீக்ஷிதர் தலைமையில் நிறைவேற்றப்பட்டு, ஓர் அரசு ஆணை வாயிலாக 144 சதுர அடி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டது//
காவல் நிலையத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் குறிப்பிட்ட இடைவெளி உண்டு.
திருவரங்கத்தில் 12 வருடம் இருந்தவன் என்பதாலேயே இதைச் சொல்ல விரும்புகிறேன், அம்மாமண்டபம் வரை ராஜகோபுரத்திற்கு நேர் எதிர் போக்குவரத்து சாலைதான். உலகப்பிரசித்தி பெற்ற ராஜகோபுரம் உருவாகும் முன்னமே போடப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை இயற்றியவரும் ஒரு ஆத்திகர்தான்
//கோவில் மாடப் புறாக்களுக்கு கருணாநிதி அனுமதித்து கி.வீரமணி கட்டிய கழிவறையாக இருந்துவிட்டுப்போவதில் ஆட்சேபமில்லை எனக் கொள்ளவேண்டியதே!////
காண்போரை நடு நடுங்க வைக்கும் கரும்பாறை தன்னை கழிவரையாக உபயோகிக்கும் மாடப்புறாக்களை ஏன் நடுங்க வைப்பதில்லை, என்ற மர்மத்தை
ஹரிஹரன் அய்யா விளக்க வேண்டுகிறேன்.
பாலா
பாலா
முத்துக் குமரன்,
தகவலுக்கு நன்றி. நான் செய்தியில் இருந்ததை குறிப்பிட்டிருந்தேன், அவ்வளவே, எவ்வளவு தொலைவில் அமைக்கப் போகிறார்கள் என்பதை அறியவில்லை.
பாலா,
வந்து விட்டீர்களா ? தங்கள் கேள்விக்கு Hariharan ஐயாவே பதிலளிப்பார் :) நன்றி.
எ.அ.பாலா
அதனாலென்ன, காலப்போக்கில் வெண்தாடிக்கு ஒரு நாமத்தைப்போட்டு இவர்தான் ஈச்சங்காடு வெங்கடாச்சரி மகன் ராகவாச்சாரின்னு எடுத்து வுட்டுறலாம் ;D கடைசியில் பெருமாள் தரிசனத்துக்கு கோவில் வெளியே நிற்கவைத்துவிட்டார்களே!
ஏதோ இந்த சிலையை சாக்காக வைத்தாவது கோவில் அருகில் வந்து கோவிலின் நிழல் இந்த மக்கள் மேல் விழுந்து, அவர்களும், அவர்களது குடும்பதினரது பக்தியில் தலையிடாது பகுத்தறிவும், சுய அறிவும், தனிமனித சுதந்திரமும் பெற்றால் சரி....
anony1 & 2,
nanRi.
Neelakantan,
My apologies for slightly editing your comment and publishing it below, to avoid a "slanging match" type discussion in future! Hope you understand. Thanks !
*************************
நீலகண்டன் said...
செய்த பாவத்துக்கு அந்த இனவெறி பிடித்த பகுத்தறிவற்ற ஆசாமியின் சிலையை அங்கேயே பெருமாள் முன்னால் ... edited ... நிக்கவைத்து வரும் போது போகும் போது ...edited ... கரும்பாறைக்கு ... edited ... எறிந்து விட்டு போகலாம். ஈவேரா தலித்துகளுக்கு செய்த துரோகங்களை ஒரு பட்டியலிட்டு அதன் அருகிலேயேமொரு டிஜிடல் போர்ட் வைக்கலாம். ஈவேரா பகுத்தறிவை விட பதவியை விரும்பும் பதவி பித்தர் என அண்ணா சுட்டிக்காட்டிய புகழுரையை அங்கே பெரிதாக செதுக்கி வைக்கலாம். அவ்வப்போது செருப்பு மாலை போடலாம் .... edited .....
12:44 PM, November 24, 2006
*****************************
Nice editing Bala...
Now they can make umpteen guesses as to what i wrote there exactly.
They can be sure there is nothing to flatter the old windbag.
:)
நீலகண்டன்,
புரிந்து கொண்டமைக்கு நன்றி.
என்றைக்கு நிரைவேற்றிய தீர்மானமானாலும் கோவிலுக்கு முன்னால் இது தேவையா ?
தி. க வினர் ஆண்மையுள்ளவர்கள் என்றால் ஒரு சர்ச்சின் முகப்பிலோ, பெரியார் பெரிதும் விரும்பிய இஸ்லாம் மதத்தின் தொழுகைத்தளமான மசூதிக்கு உள்ளோ வைக்கட்டுமே !
அதற்கு பெரியாரை எதற்கெடுத்தாலும் துணைக்கு அழைத்துக் கொண்டு இந்து மதத்தைத் தூற்றும் இணைய இஸ்லாமிஸ்டுகள் சப்போர்ட் செய்யட்டுமே!
இந்துக்களை கேலி செய்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இதெல்லாம் செய்கிறார்கள்.
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வலுவான அடி விழும். அன்று தந்தை பெரியார் என்ன அவரைப் பெற்ற தந்தைகள் வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது.
///இந்துக்களை கேலி செய்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இதெல்லாம் செய்கிறார்கள்.///
No hard feelings! இதில் இந்துக்களுக்கு எந்த அடியும் இல்லை. யாராவது போயிலுக்குப் போகிறவர்கள் முன்னால் நிற்கும் பெரியாரைப் பார்த்துவிட்டு மனம் மாறி திரும்பிப் போகப் போகிறார்களா? அவரை (பார்வையாளராக) வெளியே நிற்கவைத்து அவர் முன்னாலேயே அத்தனை கூட்டமும் கோவில் விழாக்களும் அமர்க்களமாக நடக்கப் போகிறது. அடி பெரியாருக்கு அல்லது அவர் அடிப்பொடிகளுக்குத் தான்.
எல்லா ஊரிலும் இருக்கும் பெரிய பெரிய கோவில் வாசல்களில் பெரியாருக்கு சிலை எடுக்கலாம்.
இவர்களெல்லாம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
கூட்டமல்லவா?
அதனால் தான் ஈ.வே.ரா.வை இப்படி அரங்கன் முன்னே நிற்க வைத்து விட்டு
அவரைப் பார்க்கும் சாக்கிலே அரங்கனை தரிசிப்பது தான் அவர்கள்
நோக்கம். முதல்வருக்கும் வயதாகி விட்டதல்லவா, இப்படியாவது
அரங்கனின் அருள்பெற்று போறவழிக்கு
புண்ணியத்தைத் தேடடும். பாவம் பிழைச்சுப் போகட்டும்,
ஏதோ செஞ்ச பாவத்துக்கெல்லாம் சேத்து, காலகாலமா இரங்கநாதர் சந்நிதி.. அதுகூட இல்ல... சந்நிதி வாசலிலேயே காக்க வச்சுட்டாங்களே. இப்படியாவது தேறினாத்தான் உண்டு இந்தாளும் அவரு சிஷ்ய கோடிகளும்.
ஆமா, தன் கையக் இரங்கநாதர் பக்கம் காட்டி அவரப் புடிச்சுக்கங்கடான்னு அறிவுரை சொல்லப்போறாரா? இல்ல குச்சிய பிடிச்சபடியே பெருமாளோட அழகையே பார்த்திருக்க போறாரா? எப்படி வாய்ச்சிருக்கோ. பார்க்கத்தானே போறோம்.
வஜ்ரா,
//என்றைக்கு நிரைவேற்றிய தீர்மானமானாலும் கோவிலுக்கு முன்னால் இது தேவையா ?
//
அதனால் என்ன ? இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதனால் கோயிலுக்குச் செல்லாமல் இருக்கப் போகிறார்களா ? பெரியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிலையை திகவினர் நிறுவுகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோமே. என்ன, உத்சவங்களின் போது அனாவசிய கலாட்டா / தகராறு நடக்காமல் இருக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
அனானி 1,
//எல்லா ஊரிலும் இருக்கும் பெரிய பெரிய கோவில் வாசல்களில் பெரியாருக்கு சிலை எடுக்கலாம்.
//
:))))))))
அனானி 2,
//அதனால் தான் ஈ.வே.ரா.வை இப்படி அரங்கன் முன்னே நிற்க வைத்து விட்டு
அவரைப் பார்க்கும் சாக்கிலே அரங்கனை தரிசிப்பது தான் அவர்கள்
நோக்கம்.
//
நல்ல விஷயம் தானே :))))) அரங்கன் நாத்திகரையும் அரவணைப்பவன் தானே !!!
எ.அ. பாலா
***********************************
Thanks, Anony !
பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் வைத்ததற்கு காரணம், அப்போது உயர் சாதியினர், மூட நம்பிக்கைகளை வைத்து பிறரை தங்களது ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருப்பது உடைக்கவே என்று என்று சொல்லப்பட்டாலும், அவரது ஆலயப் பிரவேச முயற்சிகளை சிலர் முரணாகப் பார்க்கின்றனர். இறை நம்பிக்கை (அதன் தொடர்ச்சியாக, நல்ல குணங்கள் எதிர்பார்க்கும் அளவில் இல்லை என்றாலும்!) தழைத்து வளர்ந்திருப்பதை நோக்கினால், பெரியாரின் இறை மறுப்புக் கொள்கை தோல்வியே அடைந்திருக்கிறது.
எ.அ.பாலா
அப்போ இனி பெரியாரிஸ்டுகளும் ராப்பத்து-பகற்பத்து, மற்றும் இன்ன பிற உற்ச்சவங்களை கொண்டாடுவார்கள்ன்னு சொல்லுங்க...
எங்க, மதுரை கோவிலருகில் ஒரு பெரியார்-மணியம்மை சிலை வைத்தால் சித்திரை திருவிழால, மீனாக்ஷி திருமணத்தன்று இவர்களுக்கும் திருமணம் நடத்தி வழிபடலாமே?....தி.க வினர் செய்வார்களா?....
// இறை நம்பிக்கை (அதன் தொடர்ச்சியாக, நல்ல குணங்கள் எதிர்பார்க்கும் அளவில் இல்லை என்றாலும்!) தழைத்து வளர்ந்திருப்பதை நோக்கினால், பெரியாரின் இறை மறுப்புக் கொள்கை தோல்வியே அடைந்திருக்கிறது. //
vice versa
//காண்போரை நடு நடுங்க வைக்கும் கரும்பாறை தன்னை கழிவரையாக உபயோகிக்கும் மாடப்புறாக்களை ஏன் நடுங்க வைப்பதில்லை, என்ற மர்மத்தை ஹரிஹரன் அய்யா விளக்க வேண்டுகிறேன்.//
பாலா,
இதுல நான் வந்து தான் விளக்க என்று என்ன இருக்கு?
நம்ம கரும்பாறைக்குத்தான் உருப்படியான ஒரு அறிவும் கிடையாதே!
ரெண்டு/மூன்று அறிவு படைத்த மாடப் புறாவுக்குக்கூட எப்டீயாப்பட்ட கருப்பு கிரானைட்டையும் எப்படி எதுக்குப் பயன்படுத்தனும்னு தெளிவாத் தெரிஞ்சி வச்சிருக்கு!
Thanks, Anony !
//முத்துகுமரன் said...
// இறை நம்பிக்கை (அதன் தொடர்ச்சியாக, நல்ல குணங்கள் எதிர்பார்க்கும் அளவில் இல்லை என்றாலும்!) தழைத்து வளர்ந்திருப்பதை நோக்கினால், பெரியாரின் இறை மறுப்புக் கொள்கை தோல்வியே அடைந்திருக்கிறது. //
vice versa
//
May I ask HOW ?
//
நெருப்பு சிவா said...
// ரெண்டு/மூன்று அறிவு படைத்த மாடப் புறாவுக்குக்கூட எப்டீயாப்பட்ட கருப்பு கிரானைட்டையும் எப்படி எதுக்குப் பயன்படுத்தனும்னு தெளிவாத் தெரிஞ்சி வச்சிருக்கு //
ஆங்! கன்பூஸ் ஆயிருச்சே. கோயிலுக்கு உள்ளார இருக்கற கிரானட்டயும் சேத்துதான சொன்னீங்க? காமெடி கீமெடி பண்ணலியே?
//
:)))))
//ஆங்! கன்பூஸ் ஆயிருச்சே. கோயிலுக்கு உள்ளார இருக்கற கிரானட்டயும் சேத்துதான சொன்னீங்க? காமெடி கீமெடி பண்ணலியே?//
அய்யா நெருப்பு,
கோயுலுக்கு வெளியில இருக்குற கிரானைட் கரும்பாறையைப் பத்தித்தானே பதிவே? பேசப்படுவதும் அதுவே!
கோயிலுக்குள்ள இருந்தா அது தெய்வம்னும் வீம்புக்கு நடுரோட்டுல நின்னா கழிவறைன்னும் கோவில் மாடப் புறாக்குக் கூட தெரிஞ்ச விஷயமுங்கோ கன்பூஸ் கிங்!
Thanks for responding, Hari :)
The facts are out in so many portals.Periyar would sincerely thank all the mud slingers along with all the ones in the past who threw chapels,stones,snakes and all.The same people later invited him to open his own statue erected by them like in Theni and other places.There probably is not a single religious town in Tamilnadu without a Periyar statue.The DK erected the statue legaly about a mile away from the temple.Some fanatics were despatched from Coimbatore.The DK people have been asked by their leader to keep calm and not to go for vengence.Anti social elements are making use of the situation.RSS crowd would like to make hay out of it.Atleast some will hear the arguments and form their own opinion.Periyar got more milege out of all these and thanks his opponents as usual for the advertisement.Keep the mud slinging and he will thank you more.He will always say "FORGET GOD THINK OF MAN"
//கோயிலுக்குள்ள இருந்தா அது தெய்வம்னும் வீம்புக்கு நடுரோட்டுல நின்னா கழிவறைன்னும் கோவில் மாடப் புறாக்குக் கூட தெரிஞ்ச விஷயமுங்கோ கன்பூஸ் கிங்!//
ஹரிஹரன் அய்யா,
ஒருவேளை அந்த மாடப் புறாக்கள் இந்து கோவிலில் இருப்பதால் ஆரிய புறாக்களோ? ஒரிஜினல் திராவிட புறாக்கள் கரும்பாறையைக் கண்டு நடுங்கி பறந்து போகும் அல்லவா?
மாயவன் அய்யா சொன்னபடி மசூதிக்கு முன்னாலும்/மாதா கோவிலுக்கு முன்னாலும் கரும்பாறையை வைத்து அங்கு வாழும் மாடப்புறாக்கள் திராவிடமான்னு பகுத்தறிவோடு கண்டுபிடிக்கலாம்னு தோணுதய்யா.
பாலா
பெரியார் சமநீதிக்குப் போராடியவர் என்பதால் அங்கீகாரம் பெற்றார்.
ஆனால் அவ்ரின் இறை நம்பிக்கை இன்மையால்தான், அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவைல்லை
அதே இறை நம்பிக்கையின்மையால்தான் இன்றைய முதல்வர் பதவிக்காக மருத்துவர் அய்யா போன்றோரின் காலில் விழுந்து கிடக்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்
ஆனால் இறைவனை உணர்ந்து வழிபட்டு, மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி சென்றுவந்த புரட்சிதலைவர் ஒருவர்தான் முழு வெற்றி பெற்றுக் கடைசிவரையில் ஆட்சியில் இருந்ததோடு இறந்து சிவபதவி அடைந்தபிறகும், இன்று மக்கள் மனதிலும் இருக்கின்றார்
தமிழன், நெருப்பு சிவா, பாலா, அனானி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
//ஏண்ணா, தெரியாத சாமி(!?)ங்குளுக்கே சிலை வக்கறப்போ, தெரிஞ்ச தலைவருக்கு f ம் சேர்த்து. ஒரு ஒரசாரமா ஒண்டிக்கறம்னா...//
ஆஹா! இது நியாயம். சிவன் கோயிலில் நாயன்மார்கள் போல, திருமாலுக்கு ஆழ்வார்கள் போலத்தானா இவரும்? கடவுளைத் திட்டுனது எல்லாம் அவரைப் போற்றுனதுதானா?
இவருக்கு உள்ள சிலை வெச்ச பின்னாடி தனி ஸ்தோத்திரங்கள், உற்சவங்கள் எல்லாமும் உண்டா? அபிஷேக ஆராதனை எல்லாம் உண்டா? அவருக்கு சந்தன காப்பு செய்து மாலை அணிவிக்கலாமா? (இப்போ அதை செஞ்ச பார்ட்டி உள்ள இருக்காராமே, அவரை கொஞ்சம் வெளிய கூட்டிக்கிட்டு வந்து பூசாரியாக்கலாமா?)
கடவுளே இல்லை என்று கடைசி வரை கத்துனவரை கடவுளாகவே ஆக்கிட்டீங்களே, நீங்கதாண்டா சிஷ்யனுங்க!
ஆனா ஒண்ணு, இவரு உள்ள வந்த பின்னாடி அரங்கனை வெளிய அனுப்ப மாட்டீங்கன்னு மட்டும் ஒரு கியாரண்டி குடுங்கப்பா. எதுக்குச் சொல்லறேன்னா, இடத்தைக் கொடுத்தா 'மடத்தை'ப் பிடுங்கறது உங்களுக்குச் சொல்லியா தரணும்?
//ஏண்ணா, தெரியாத சாமி(!?)ங்குளுக்கே சிலை வக்கறப்போ, தெரிஞ்ச தலைவருக்கு f ம் சேர்த்து. ஒரு ஒரசாரமா ஒண்டிக்கறம்னா...//
ஏண்டா அம்பி, உனக்கு அந்த மேரி மாதா, யேசு, புத்தர், இவாளை எல்லாம் நல்ல பழக்கமோ? அவாளுக்கும் சிலை இருக்கே, அதைப் பத்தி பேச மாட்டேங்கற? அவா கோவில்லையும் போயி நம்ம பெரியாரோட சிலையை வெக்க சொல்லுங்கோளேன்.
Post a Comment